ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை: இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை
ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாக சரத்பொன்சேகாவை அரசு விடுதலை செய்வதும் இடம்பெற்றுள்ளது என இலங்கை எதிர்கட்சித் த்லைவர் ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு பொன்சேகா செல்வதை அனுமதிக்காமல் இருப்பது அவரது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும்.
நாடளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் உரிமை இராணுவ நீதிமன்றத்திற்கு கிடையாது என்றும், இராணுவச்சட்டம் நாடாளுமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இயங்குவதாகவும், எனவே அதற்கு இவ்வாறு செல்வாக்கு செலுத்தும் அதிகாரம் கிடையாது என்றும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொன்சேகா தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதை ஒரு விடயமாக கருதி கடந்த புதன்கிழமையன்று இது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment