நாட்டை கட்டியெழுப்ப சர்வதேசம் கைகொடுக்க வேண்டும் வெளிநாட்டு தூதர்களிடம் ஜனாதிபதி.
இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள் அனைவரையும் நேற்று ஜனாதிபதி சந்தித்து பேசினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இவ் விசேட வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் கைகொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
கடந்த கால நெருக்கடியான நிலைமைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அத்தகைய துன்பங்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment