Monday, May 17, 2010

குற்றவாளிகள் பட்டியலில் பின்லேடன் முதலிடத்தில். USA தீப்பற்றி எரியும்: தாலிபான்

அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அல் கொய்தா இயக்கத் தலைவன் பின்லேடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறான். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் என்ற பத்திரிகை உலகில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் முதல் இடத்தில் உள்ளார். உலகில் மிக அதிகமாக தேடப்படும் நபர்களில் கடந்த 3 ஆண்டுகளாக பின்லேடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த உலகின் மிகப் பெரிய போதை பொருள் கடத்தல்காரனான ஜோகியூன் குஸ்மன் இருக்கிறான். மும்பை நிழல் உலக தாதாவாக திகழ்ந்த தாவுத் இப்ராகிம் 3வது இடத்தில் இருக்கிறான்.

அமெரிக்கா தீப்பற்றி எரியும்: தாலிபான் புதிய மிரட்டல்

அமெரிக்கா தீப்பற்றி எரியும் என்று தாலிபான் இயக்கம் புதிய மிரட்டலை விடுத்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பு ஏற்பதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவை எரித்து விடுவோம் என்று புதிய மிரட்டலை விடுத்து அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அசீம் தாரிக் பேசிய வீடியோ படம் வெளியாகி உள்ளது.

'டைம்ஸ் சதுக்க வெடிகுண்டு வெடிக்காவிட்டாலும், விரைவில் அமெரிக்காவில் குண்டுகள் வெடிக்கும்.அதில் அமெரிக்கா தீப்பற்றி எரியும்.

அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கும் அதே கதிதான் ஏற்படும். அமெரிக்காவின் செயல்திட்டத்தை பின்பற்றும் பாகிஸ்தான் அரசு தூக்கி எறியப்படும்.எங்களை நசுக்க முடியாது' என்று அதில் அவர் பேசியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com