மாணவர்கள் பொலிஸார் மோதல் : மாணவன் ஒருவன் வைத்தியசாலையில்.
மருத்துவ கற்கை நெறி ஒன்றின் காலப்பகுதியை நான்கு ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைப்பதென்ற பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட பிரிவுக்கான தலைமையின் முடிவை எதிர்த்து மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் மாணவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உடுல் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment