வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பிராண்ஸ் நாட்டவர் பலி.
வவுனியாவுக்கு அப்பாலுள்ள இரணை இலுப்பை குளத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணியின் போது பிரான்ஸ் நாட்டு அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கண்ணவெடி வெடித்ததன் காரணமாகவே உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று எப். எஸ். டி. நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ். தியாகேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்இ எப். எஸ். டி. நிறுவனம் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சுவிஸ் நாட்டு அமைப்பாகும். இந்நிறுவனத்தில் தொழில் நுட்ப உத்யோகத்தராகப் பணியாற்றி வந்த பிரான்ஸ் நாட்டவரே உயிரிழந்துள்ளார்.
இந் நபர் கண்ணி வெடி விபத்துக்கு உள்ளானதும் உடனடியாக எப். எஸ். டி. நிறுவனத்தின் மருத்துவக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் அம்புலன்ஸ் வண்டியில் விரைந்த போது வண்டி விபத்துக்குள்ளானதில் சாரதியும்இ மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணிவெடி விபத்தில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவரின் சடலமும் வவுனியா சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment