அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களைத் திருப்பி கொடுக்க ஜனாதிபதி உத்தரவு.
டக்ளஸ் மீது அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குற்றச்சாட்டு.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் தமது அமைச்சுக்களுக்கு சொந்தமான வாகனங்களை உடனடியாக திருப்பியளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் புதிய அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களை ஜனாதிபதி சந்தித்து பேசியபோது, முன்னாள் அமைச்சர்கள் தமது பிரச்சார வேலைகளுக்காக அமைச்சின் வாகனங்களை கொண்டு சென்றுள்ளதாகவும் அவை திருப்பி பாரமளிக்கப்படவில்லை எனவும் புதிய அமைச்சர்களில் சிலர் முறையிட்டுள்ளனர்.
முன்னாள் மீன்பிடி அமைச்சரான பீலிக்ஸ் பெரேரா தற்போது சமூக சேவைகள் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். மீன்பிடி அமைச்சினை பாரமெடுத்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ண முன்னாள் அமைச்சர் தனது அமைச்சின் வாகனங்களை திருப்பி அளிக்கவில்லை எனக் கூறியபோது, தனது புதிய அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தனது அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களையும் யாழ் கொண்டு சென்றவிட்டதாகவும் அவை திருப்பியளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி அமைச்சர்கள் அனைவரும் வாகனங்களை உரிய முறையில் உரிய அமைச்சுக்களுக்கு பாரமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment