Saturday, May 22, 2010

‘வெடித்துச் சிதறிய விமானத்திலிருந்து தைரியத்துடன் தப்பி ஓடினேன்’

உயிர்தப்பியவர் மெய்சிலிர்க்கும் பேட்டி
மங்களூர் விமான விபத்தில் பெண், டாக்டர், சிறுவன் உட்பட 8 பேர் உயிர் தப்பினார்கள். அவர்களில் உமர் பாரூக் என்பவரும் ஒருவர். அவர் விமானத்தின் கடைசிப் பகுதியில் இருந்தார்.விமானம் தீப் பிடித்து எரிந்தபோது அதனுள் உமர் பாரூக் சிக்கிக் கொண்டார். அவரது முகம், கைகளில் தீக் காயங்கள் ஏற்பட்டன. என்றாலும், துணிச்சலுடன் செயல்பட்டதால் உமர் பாரூக் உயிர் தப்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது :-

விமானம் தரை இறங்க 5 நிமிடமே இருந்ததால் எல்லோரும் உற்சாகத்துடன் இருந்தோம். திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லோரும் அலறி னோம். சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத் துடன் விமானம் மோதியது.

விமானம் முழுக்க தீப் பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது. உடலில் தீப் பிடித்ததால் பயணிகள் எல்லோரும் கூக்குரலிட்டனர். ‘உதவி, உதவி’ என்று அலறினார்கள். ஆனால், அந்த காட்டுக்குள் உடனே உதவிக்கு வர யாரும் இல்லை.

என் அருகில் இருந்தவர்கள் எல்லோரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது. தைரியத்தை வரவழைத் துக் கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உட்பட விமானத் தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது. என் அருகில் ஒரு பயணி கூட இல்லை. நான் மட்டும் தான் உயிர் பிழைத்ததாக நினைத்தேன். அந்த மலைக் காட்டுக்குள் தட்டுத் தடுமாறியபடி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தேன்.

தற்குள் அந்தப் பகுதி கிராம மக்கள் விமானம் விழுந்த இடம் நோக்கி காட்டுக்குள் ஓடி வந்திருந் தனர். தீக்காயங்களுடன் வந்த என்னைப் பார்த்ததும் முதல் உதவி செய்தனர். பிறகு ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து என்னை சிறிது தூரம் அழைத்து வந்தனர்.

பிறகு என்னை ஒரு ரிக்சாவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மிக மோசமான விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எனக்கு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும். நான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி உள்ளேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com