அமைச்சின் தளபாடங்களை எடுத்துச்சென்றார் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஸ்.
சுகாதார சேவைகள் அமைச்சின் பிரதியமைச்சர் வடிவேல் அமைச்சகத்திற்கு சொந்தமான தளபாடங்கள் சிலவற்றை எடுத்து சென்றுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு எடுத்துச்செல்லப்பட்டுள்ள தளபாடங்களின் பெறுமதி சில மில்லியன்கள் என தெரிவித்துள்ள அவர், அமைச்சின் முன்னாள் ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த அமைச்சுக்கு சொந்தமான 12 வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசேட விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நுவரேலிய மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
What a shame! after all it is public property.Law and order for ordinary citzens
Post a Comment