இராணுவ நீதிமன்றுக்கு உச்ச நீதிமன்று இடைக்கால தடை உத்தரவு.
ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ குற்றவியல் நீதிமன்றக்கு உச்ச நீதிமன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெனரல் பொன்சேகா மீது இரு இராணுவ குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. முதலாவது நீதிமன்றில் ஜெனரல் பொன்சேகா சேவையிலிருந்தபோது அரசியலில் ஈடுபட்டார் எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு அவரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் இக்குற்றச்சாட்டு தொடர்பாக இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனவும் அவ்வாறு விசாரிக்கப்படுவதாயின் அது சிவில் நீதிமன்றிலேயே விசாரிக்கப்படவேண்டும் எனவும் அவரது மனைவி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணைகளை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளதுடன் அதுவரை இராணுவ குற்றவியல் நீதிமன்றுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment