கடத்திச் செல்லப்பட்ட யாழ் மாணவி விடுதலை
நேற்று கடத்திச் செல்லப்பட்ட யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவி நகுலேஸ்வரன் தேவிகா இன்று அதிகாலை அவரின் வீட்டிற்கு அருகில் விட்டுச்செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இம்மாணவி பாடசாலை செல்லும் போது மூன்று பேர் முச்சக்கர வண்டியில் வந்து கடத்திச் சென்றதாகவும், பிற்பாடு இன்று காலை தன்னை வீட்டருகில் கொண்டு வந்து விட்டதாகவும் அச்சிறுமி தெரிவிக்கின்றார்.
கடத்திச் சென்றவர்கள் தன்னுடைய கண்ணை கட்டியிருந்ததால் அவ்ர்களை தன்னால் அடையாள முடியாதுள்ளதாகவும் அம்மாணவி குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக யாழ் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.
1 comments :
Abduction,rape, robbery,life threatning anonymous calls and messages.What a shame.We wonder what the politicians police and the
armed forces are doing in north and east srilanka.Why can't they catch the criminals and give them the maximum punishment.It's really really a shame to the whole nation.This type of criminals should be wiped out from the society.
Post a Comment