பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவனன பிணையில் விடுதலை.
ஜெனரல் பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளரான பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலனவை கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் பிணையில் நேற்று விடுதலை செய்தார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உதவியாளராக கடமையாற்றியமையே இவர் கைது செய்யப்பட்டமைக்கு காரணமாக அமைந்திருந்ததுடன் இவர் சதிப்புரட்சி ஒன்றின் மூலம் நாட்டின் ஆட்சியை கவிழ்க முற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிற்பாடு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கடமைநேரத்தில் கைது செய்யப்பட்ட இவருடன் சேர்த்து நால்வருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் இவரின் கடவுச் சீட்டை பறிமுதல் செய்யுமாறும் மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment