Friday, May 21, 2010

படையினர் எவ்விதமான மீறல்களையும் செய்ய- வில்லை என்கின்றார் ஜெனரல் பொன்சேகா.

இலங்கை இராணுவத்தினர் எவ்விதமான போர்க் குற்றங்களையும் மேற்கொள்ளவில்லையென முன்னாள் இராணுவத் தளபதியும்இ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அவ்வாறான யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருக்குமானால் அதுதொடர்பான விடயங்களை வெளியிட தான் ஒருபோதும் தயங்கப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். செனல் 4 ஊடகத்தினால் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் தொடர்பாக மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பலியான பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி உள்ளிட்டோரின் சடலங்களை படையினர் சீருடையுடனேயே மீட்டெடுத்தனர். பொதுவாக மரபுவழி யுத்ததில் ஈடுபடுபவர்களின் சடலங்களை மீட்கின்ற போது அவர்களது சடலங்கள் சீருடையுடன் காணப்படுவதில்லை எனக் குறிப்பட்ட அவர்; புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உடை மாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்த படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்திருந்தனர் எனினும் அவருக்கு ஆடை மாற்றப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் சீனாவினால் தனக்கு நீண்ட காலமாகவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த அழைப்புக்கள் பின்போடப்பட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதியே பயணமாக முடிந்தது. ஆந்தப் பயனத்தை முடித்து 17 ஆம் திகதி இரவு 9 மணிக்கே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைநதடைய முடிந்தது. ஆயினும் சீனாவில்; தங்கியிருந்த காலத்தில் கொழும்புடன் தொடர்பினை ஏற்படுத்தி அதிகாரிகளுக்கு கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணமே இருந்ததாகவும் கூறிய சரத் பொன்சேகா அந்த அதிகாரிகள் தன்னுடன் நெருக்கமாக இருந்தனர் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை திரும்பிய மறுநாள் 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு படையினர் புலிகளை 500 மீற்றருக்குள் சுற்றிவளைத்து இறுதி தாக்குதலை மேற்கொண்டனர். அந்தத் தாக்குதலில் பிரபாகரன் உட்பட 600 புலிகள் வரை பலியானார்கள்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நான் இருந்து வெளியே சென்றுகொண்டிருந்த போதே பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக படையினர் தகவல் அனுப்பி இருந்தனர். ஜனாதிபதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 ஆம் திகதி முழந்தாளிடும் போதும் யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை 19 ஆம் திகதியே யுத்தம் நிறைவடைந்தது என்ற தகவலையும் சரத் பொன்சேகா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இன்றை ஊடக மகாநாட்டில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா போர்க் குற்றம் ஆதாரங்களுடன் முன்வைத்தால் விசாரிக்கவேண்டிய கடப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்டு சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு மற்றும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் முதலானவை முன்வைத்துள்ள போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருப்பதாக இடம் நேரம் உள்ளிட்ட ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் விசாரணை செய்யவேண்டியது அவசியம். ஆந்த வகையில் போர்க் குற்றங்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தகவல்கள் கிடைக்குமாயின் தனக்குத் தெரிந்ததை மறைக்கப்போதில்லை எனவும் அறிவித்துள்ளார்.

ஒழுக்கம் நிறைந்த இலங்கைப் படையினர்; சாதாரண மக்களுக்கு குறைந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யுத்தத்தை முன்னெடுத்து மூன்று இலட்சம் மக்களைக் காப்பாற்றி 10 ஆயிரம் புலிகளைக் கைது செய்ததாக பெருமிதத்துடன் கருத்து வெளியிட்டார் சரத் பொன்சோகா.

இராணுவ குற்றத்தை ஒருபோதும் நான் மறைக்கவில்லை என்பதுடன் அவ்வாறான குற்றங்களை செய்தவர்கள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டனர் எனச் சுட்டிக்காட்டிய பொன்சோகா சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

எனினும் இராணுவத்திற்கு வெளியே இருப்பவர்களின் கரங்களில் போர்க் குற்றக் கறை படிந்திருந்தால் அவற்றுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதனையும் தெரிவிக்க மறக்கவில்லை.

யுத்ததம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து எனது அறிவுரைகளையே படையினர் பின்பற்றினர் எனக் கூறிய சரத் இருந்த போதும் தனது அறிவுரைகளை படையினர் பின்பற்றினர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நீண்ட கடுமையான போராட்டங்களிடையே படையினர் பெற்றுக் கொண்ட வெற்றியை மக்களின் வெற்றியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் எதிரியின் பக்கமாக மக்கள் அனைவரும் திருப்பப்பட்டமையினால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்பார்க்காமலும் கல்விஇ சுகாதாரம் மற்றும் உணவு விடயங்களில் கூட கவனத்தை செலுத்தாமலும் இருந்தனர். ஆனால் அவை இப்போ பயனற்றுப் போய்விட்டன.

கடந்த 30 வருடங்களாக நாட்டு மக்கள் அனுபவித்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின்; நிலையான சமாதானத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் நாடுஇ தேசியம் என்ற ரீதியில் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.

யுத்தத்திற்கு பின்னர் மக்கள் எதிர்பார்த்திருந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நிர்வாக பிரச்சினையும் இருக்கின்றது இயற்கை ஒத்துழைக்க மறுத்தமைக்காக வருந்துகின்றேன். எனினும் அதனை எவராலும் மாற்றியமைக்க முடியாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com