அமெரிக்காவுக்கு தாலிபான் தலைவர் மசூத் மிரட்டல்
அமெரிக்காவின் பல நகரங்களில் தங்கள் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தாலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் மிரட்டல் விடுத்துள்ளார். ஹக்கிமுல்லா மசூத், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஹக்கிமுல்லா அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வீடியோவில் தோன்றி பேசிய கேசட் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்டதாக காட்டும் இந்த கேசட்டில், அவர் 9 நிமிடங்கள் பேசி இருக்கிறார்.
அதில், "இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமெரிக்காவின் பல நகரங்களில் எங்கள் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள். தாலிபான், அல் - காய்தா தலைவர்களை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்குவோம்.இதை உலகம் பார்க்கப்போகிறது" என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment