அமெரிக்காவில் கார் குண்டு : பாகிஸ்தானியர் கைது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கபட்டு பின்னர் செயலிளக்கச் செய்யப்பட்டது. இந்நிலையில் இக்குண்டினை தாமே வைத்தோம் என தலிபான்கள் உரிமை கோரியிருந்தனர். ஆனால் அமெரிக்க பொலிஸார் இதை மறுத்திருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள ஒருவைரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டைம்ஸ் சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியிருந்த படத்தின் உதவியுடனேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment