யாழ்.நகரில் நேற்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி! அலக்ஸ் இரவி
யாழ்.நகரில் நேற்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி ஒன்று இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல், மிரட்டல் என்பன காரணமாகக் கைவிடப்பட்டது என்றால் இதன் அர்த்தம் என்ன? இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்?
ஏற்கனவே இன்று புலிகளும் இல்லாத நிலையில் முன்பு ஒரு பாராளுமன்ற பிரதிநிதிதுவதுடன் இருந்த டக்கிளசு அவர்களின் கட்சி இன்று மூன்று பாராளுமன்ற பிரதிநிதிதுவதுடன் இருக்கும் போது, அதுவும் யாழில் மேன்மை தங்கிய கவுரவ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்கிளசு தேவானந்தா அவர்களும் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்து மக்கள் நலன்களில் கூடுதல் கவனமெடுத்து செயலாற்றிவரும் நிலையில் அதே யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வரும், ஆள்கடத்தல், கப்பம்கோரல், கொலை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை யாழில் யார் செய்கிறார்கள் என்று டக்கிளசு கூட்டம் அறியாத நிலையில் யாழ்.நகரில் நேற்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி ஒன்று இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல், மிரட்டல் என்பன காரணமாகக் கைவிடப்பட்டது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது.
யாழில் அதிகூடிய வாக்குகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட டக்கிளசுவை விட வேறு யார் இவ் மர்ம ஆள்கடத்தல், கப்பம்கோரல், கொலை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை செய்கிறார்கள்?
யாழில் அதிகூடிய வாக்குகளுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட டக்கிளசுவை விட வேறு யார் இவற்றை கண்டித்து 'மக்கள் சத்தி' என்ற அமைப்பால் கண்டனப்பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி அழைப்புகளில் பேரணியை நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தல் விட்டார்கள்?
யாழில் அதிகூடிய வாக்குகளுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் எனக் கூறப்படும் டக்கிளசு..... மக்கள் நலம் சார்ந்த டக்கிளசு ஏன் அடுத்த மாகான சபை தேர்தலில் இன்னும் அதிகூடிய வாக்குகளுடன் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் (எத்தனை வீதமான வாக்குகளால் என்று என்னைக் கேட்காதீர்கள்) இவ் கண்டனப்பேரணியை தான் முன் நின்று நடத்தியிருக்கக் கூடாது?
இதற்கிடையில் முன்பு தீவகத்தின் பொறுப்பாளராகவிருந்த, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) காரைநகர் ஒளிச்சுடர் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் மாபெரும் கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியையும், பரிசளிப்பு நிகழ்வையும் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்து பேசும் போது, 'செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்கிளசு தேவானந்தா அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை சகித்துக்கௌ;ள முடியாதவர்கள் அவர் மீதும் ஈ.பி.டி.பியின் மீதும் பல விதமான சேறு பூசும் நோக்கில் வேண்டத்தகாத அவதூறான பொய்ப் பிரச்சாரங்களை ஊடகம் என்ற போர்வையில் நின்றுகொண்டு எமது கட்சின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவருகின்றதை யாவரும் அறிவீர்கள். எனவே எமது பணிகள் இவர்களால் மேற்கொள்ளும் பிரச்சாரங்களினால் நின்றுவிடப் பேவதில்லை அது இன்னும் உத்;வேகம் கொண்டு முன்னெடுக்கப்படும்' என்றும் தெரிவித்துக் கொண்டார்.
ஆனால் இந்த தீவகத்தின் பொறுப்பாளராகவிருந்த, தற்போதைய யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) யார், இவரின் பின் புலம் என்ன என்று யாவரும் அறிந்ததே. இவர் தீவகத்தின் பொறுப்பாளராகவிருந்த காலத்தில் தீவகத்தில் நடந்தவை சான்றுகளாக உள்ள நிலையில் இன்று இவர் யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளராக பதவி உயர்த்தப்பட்ட நிலையில் யாழில் நடக்கும் சம்பவங்கள் என்னத்தை சொல்கிறது என்பதை மக்களே சிந்தியுங்கள்.
யாழில் 721,359 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 168,277 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் டக்கிளசுவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணை சின்னத்திலேயே போட்டியிட முடியாத நிலையில் வெற்றிலையில் போட்டியிட்ட நிலையில் 47,622 வாக்குகளையே பெற்ற நிலையில், அதிலும் டக்கிளசு பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 28,855 வாக்காளர்கலாளையே தெரிவு செய்யப்பட்ட நிலையில் வெறுப்படைந்த நிலையில் தமக்கு வாக்களிக்காத மக்களை பழி வாங்குகிறாரா?
இவர் எடுத்த 28,855 வாக்குகளில் தீவகத்திலேயே கூடுதலான வாக்குகளைப் பெற்ற நிலையில் தீவக பொறுப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) இன்று யாழ் மாவட்டப் பொறுப்பாளராக போடப்பட்ட மர்மம் என்ன?
தீவக பொறுப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) இன்று யாழ் மாவட்டப் பொறுப்பாளராக போடப்பட்ட பின் யாழில் தலை தூக்கியிருக்கும் ஆள்கடத்தல், கப்பம்கோரல், கொலை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை யாழில் யார் செய்கிறார்கள்?
எல்லாம் ஆதாரத்துடன் இருக்கிறது.
மக்களே! மாக்களாக இல்லாமல் சிந்தியுங்கள்!
வவுனியாவில் இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையில் மக்களுக்கு பாதுக்காப்பாக அரணாக இருந்த புளொட் அமைப்பினரை கடந்த நகர சபை தேர்தலில் வெல்ல விடாமல் இவர்கள் செய்த சதிகள் யாவரும் அறிந்ததே!
மக்களே விழித்தெழுங்கள்!
மக்கள் சக்தியே மாபெரும் சக்தி!
இவர்கள் இன்று அலுவலகம் அமைத்து இருக்கும் ஸ்ரீதர் தியட்டர் யாருடையது? வாடகை கொடுக்கிறார்களா?
மக்களே திரண்டெளுங்கள்!
போலிகளை இனம் காணுங்கள்!
போலிகளை முற்றுகையிடுங்கள்!
முன்னர் தீவகப் பொறுப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஊர்காவத்துறையை சேர்ந்த மதனராசா தற்போது எங்கே?
இவரின் காலத்திலும் தீவகத்தில் இவர்கள் மக்களுடன் நடந்த விதம் மறக்கமுடியுமா?
பொறுத்தது போதும் மக்களே திரண்டேளுங்கள்!
போலிகளை இனம் காணுங்கள்!
போலிகளை முற்றுகையிடுங்கள்!
எல்லாவற்றிக்கும் ஒரே வழி ஸ்ரீதர் தியேட்டரை முற்றுகையிடுவதா?
மக்களே சிந்தியுங்கள்!
போலிகளை இனம் காணுங்கள்!
போலிகளை முற்றுகையிடுங்கள்!
மக்கள் சக்தியே மகா சக்தி!
புதிய எழுச்சி எழட்டும்!
0 comments :
Post a Comment