ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் : சீன அதிபர் உறுதி
ஆறு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பீஜிங்கில் சீனா அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்போது ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று சீனந்நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோ உறுதியளித்துள்ளார்.
இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. விமான ஊழியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, இரு நாடுகள் இடையே நிர்வாக ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பது,விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது போன்ற ஒப்பந்தங்கள் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாயின.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், ஐக்கிய நாடுகளின் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற சீன அதிபர் ஹூ ஜின்டாவோ உறுதியளித்துள்ளமையை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment