Thursday, May 13, 2010

எ‌ன் உணவில் மருந்து கலக்க ‌சிறை காவல‌ர்க‌ள் முய‌ற்‌சி: நளினி புகார்

''என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது'' என்று சிறைத்துறை தலைவருக்கு வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினி கடித‌ம் எழு‌தியுள்ளார். இது தொட‌ர்பாக அவ‌ர் சிறைத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடித‌த்‌தி‌ல், கடந்த புதன்கிழமையில் இருந்து புது குற்றவாளி தொகுதியில் இருந்த எல்லா விசாரணை கைதிகளையும் பழைய குற்றவாளி தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.

தற்போது புது குற்றவாளி தொகுதிகள் 2, 3, 4, 5, 7, 8 ஆகியவற்றில் 200 பேர் அடைக்கக்கூடிய இடம் காலியாக உள்ளது. இதில் 6வது தொகுதியில் நான் மட்டுமே இருக்கிறேன். எனக்கு 'ஏ' வகுப்பு இருப்பதால் ஒரு உதவியாளர் உண்டு. எனக்கு அது மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், புது குற்றவாளி தொகுதியை கடந்த 21.4.2010 முதல் பெருக்கவோ, சுத்தம் செய்யவோ யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த தொகுதிக்கான வார்டர் முதல் தளத்துக்கு வரவோ, அங்குள்ள வேலைகளை செய்யவோ தடை செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர காலை, மாலை என்று என்னுடனே சமையல் அறையிலும், தொகுதியிலும் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் என் உணவில் மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என் உணவை காப்பாற்ற நான் கடும் முயற்சி செய்தும் பலன் ஒன்றும் இல்லை.

இரவில் கே.சி.லட்சுமி என்ற உதவி ஜெயிலர் 27.4.2010 இரவு வருகிறார். இவர்களாக எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து என் தொகுதியில் போட்டு விட்டு என்னை சோதனை செய்து எடுத்ததாக சொல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு எ‌ன்று நளினி எழுதியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com