சஜித் பிறேமதாஸவிடம் ஐ.தே.கட்சியின் தலைமை செல்லவேண்டும். ஜோன் அமரதுங்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவின் மகன் சஜித் பிறேமதாஸவிடம் செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், மறைந்த தலைவர் பிறேமதாஸ இந்நாட்டின் மக்களினால் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவராகும் , அவர் இந்நாட்டின் வருமானம் குறைந்த மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அவரால் முன்னெடுக்கப்பட்ட வருமானம் குறைந்தவர்களுக்கான வீட்டுத்திட்டங்களினூடாக லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அவரின் மறைவின் பின்னர் 1994 ஆண்டிலிருந்து நாட்டின் எந்தவொரு தலைவரும் அவரது பணிகளை முன்னெடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் தனது தந்தையின் அனுபவங்களை கொண்டு கட்சியையும் நாட்டையும் வழிநடத்தக்கூடிய திறமை சஜித் இடம் உண்டு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜோன் அமரதுங்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நாளை தமது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
அதேநேரம் ஏழாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நியமனங்களை மேற்கொண்டார்.
0 comments :
Post a Comment