புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க சிறப்பு நடவடிக்கை - கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக அழித்துவிட்ட நிலையில், அவர்களின் சர்வதேச வலையமைப்பையும் அழிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்க பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். ஆனையிறவில் படை வீரர் நினைவுத் தூண் திறப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபாய ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியைத் தழுவிய நிலையிலும், புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கனவை மெய்ப்பிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதனை தடுக்க வெளிவிவகார அமைச்சகம், புலனாய்வுப் பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பல்வேறு நாடுகளில் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருவதாகவும், இதனை முற்றிலும் அழிக்கும் நோக்கில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment