Wednesday, May 5, 2010

இலங்கையில் நிரந்திர தீர்வு ஏற்பட கருணாநிதி வலியுறுத்துவாராம்.

இந்திய பிரதமர் மன்மோன் சிங் ஐ சந்தித்து விட்டு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இலங்கை தொடர்பாக செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கேட்டபோது ''இலங்கையில் அதிகார பகிர்வுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்'' என தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதிலகளும் :

கேள்வி : இலங்கையில் போர் முடிந்த பிறகு அதிகார பங்களிப்பு செய்யப்படும் என்று உறுதியளித்தார்கள். ஆனால் போர் முடிந்த பிறகு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வில்லையே? கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையே?

பதில் : அது பற்றி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கேள்வி : இதற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

பதில் : நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். தனியாக வலியுறுத்த முடியாது. மத்திய அரசு மூலமாகத்தான் வலியுறுத்துவோம்.

கேள்வி : பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பது பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை படித்துள்ளார். அப்போது சில நிபந்தனைகளோடு என்று சொல்லியிருக்கிறார். என்ன நிபந்தனைகள்?

பதில் : பெரிய நிபந்தனைகள் ஒன்றும் இல்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி, அரசின் மேற்பார்வையிலே அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து, அரசின் சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு, தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக அந்த அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.

அவருடைய பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியிருக்கின்ற நிபந்தனை. இது ஒன்றும் கடுமையானது அல்ல.

1 comments :

Anonymous ,  May 5, 2010 at 9:57 AM  

Mr.Chief minister,Do you think that you've no problems in your state ..?
Before you correct the others please make yourself perfect.Our politicians never interfere in your
matters.They always mind their own business.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com