பாராளுமன்றில் இன்று : அவசரகாலச் சட்டத்தை நீக்க கோருகின்றார் ஜெனரல் பொன்சேகா.
இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் , ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான ஜெனரல் பொன்சேகா இன்று பாராளுமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், இலங்கையில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத தற்போதைய நிலையில் நாட்டில் அவசரகாலச் சட்டத்தினை நீடிப்பதில் எவ்வித பயனும் இல்லை. இந்த நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் எம்மால் நிர்வகிக்க முடியும். பாதுகாப்பில் நம்பிக்கை இல்லாத தலைவர் ஒருவருக்கே அவசரகாலச் சட்டம் போன்றதோர் மேலதிக அதிகாரம் தேவைப்படுகின்றது. அவசரகாலச் சட்டம் இன்று எதிர்கட்சியினரையும் ஊடகவியலாளர்களையும் நசுக்குவதற்கு தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , என்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படுகின்றது. இன்று பாராளுமன்றம் பிற்பகல் 4.30 வரை நடைபெறுகின்றபோதும், எனக்கெதிரான இராணுவ குற்றவியல் நீதிமன்று பிற்பகல் 1 மணிக்கு கூடுகின்றது. பாராளுன்ற அமர்வை தவிர்த்து இராணுவ குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். எனது பாராளுமன்ற சிறப்புரிமையை காத்து நான் இறுதிவரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள ஆவன செய்யுங்கள் என சபாநாயகரை வேண்டினார்.
அதேநேரம் பாராளுமன்றின் சேம்பர் பிரதேசத்திலிருந்து நபர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களை படம்பிடித்துக்கொண்டிருந்தாகவும், எதிர்கட்சியினர் சபாநாயகருக்கு முறையிட்டதை தொடர்ந்து பாராளுமன்ற காவலர்களால் அவர் அங்கிருந்து அனுப்பப்பட்டுதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது. குறிப்பிட்ட நபர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் என எதிர்கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளபோதும் அரசாங்கம் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
நாமல் ராஜபக்சவின் கன்னி பேச்சு.
அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பாராளுன்றுக்கு தெரிவாகியுள்ள ஜனாதிபதியின் புதல்வரான 24 வயதினையுடைய நாமல் ராஜபக்ச தனது பாராமன்ற கன்னிப்பேச்சினை இன்று நிகழ்த்தினார். அவரது பேச்சில் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சரியான இடம்ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment