Friday, May 21, 2010

கிறிஸ்ரினா என்ற கப்பலில் பிரபாகரன் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். ரொகான் குணரட்ன

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்புவதற்குப் பல வழிகளை வைத்திருந்ததாக சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராக இருக்கும் றொகான் குணரத்ன தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாக கிறிஸ்ரினா என்ற கப்பலை வரவழைத்து அதிலிருந்து ஹெலி கொப்டரைப் பயன்படுத்தி தப்பவது அவருடைய திட்டமாக இருந்தது. கனடாவைச் சேர்ந்த சங்கிலி என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா கப்பலை ஒழுங்கு செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கப்பலை ஒழங்கு செய்து இந்தோனேசியாவிற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அச்சுதன் என்பவர் ஹெலிகொப்டரை ஒழுங்கு செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் அதனை ஒழுங்கு செய்ய முடியாமல் போய் விட்டது. போரின் பின்னர் கிறிஸ்ரினா என்ற கப்பல் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இரண்டாவது வழிமுறையாக, பாதுகாப்பு வலயத்தை உடைத்துக் கொண்டு யால சரணாலயத்துள் நுழைவது. அங்கிருந்து தெற்கின் அடா காட்டிற்குள் நகர்வது. அதனூடாக பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புக் குறைந்த தெற்கக் கடல் வழியாக தீவிலிருந்து வெளியேறுவது.

மூன்றாவது வழிமுறையாக தளபதி ராம் இன் உதவியுன் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கிற்குத் தப்பிச் செல்வது. 2007இல் கிழக்கு கைப்பற்றப்பட்ட போதும் ராம் கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருந்து வந்தார் என குணரத்ன குறிப்பிடுகிறார்.

ஆனால், இந்த எந்தவொரு வழிமுறையும் அவருக்குக் கைகூடவில்லை. ஏனெனில் இலங்கைப் படையினர் தரையின் எல்லாப் பகுதியையும் கடல் வழியையும் சுற்றி வளைத்திருந்தனர். மே 16ஆம் திகதி முல்லைத் திவின் எல்லா கடற்கரைப்பகுதியும் இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. கடற்படையினரின் சுற்றிவளைப்பு தகர்க்க முடியாததாக இருந்தது.

நான்காவது வழிமுறையாக இலங்கைப் படைகளின் கடுமையான சுற்றிவளைப்பை நந்திக்கடலின் மேற்குப் புறத்தால் உடைத்துக் கொண்டு அடர்ந்த வன்னிக் காடுகளுக்குள் சென்று விடுவது. இதனால் தான் அங்கு விடுதலைப் பலிகள் தூரதிருஷ்டியுடன் பின்வாங்கும் போது ஆயுதங்களைப் புதைத்து வைத்தனர்.

புலிகளின் 140 போராளிகளுடன் பொட்டு அம்மான் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி (பிரபாகரனின் மகன்) ஆகியோரின் தலைமையில் பொதுமக்களைப் போல் சென்று படையினரைத் தாக்குவது என்று திட்டமிட்டனர். இதன் போது 30 தற்கொலையாளிகள் படையினர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். இராணுவத்தின் முன்னரங்கக் காவல்நிலைகளைத் தகர்த்த புலிகளால் அதற்கு மேல் முன்னேற முடியாமல் போய் விட்டது. பொட்டம்மானும் சார்ள்ஸ் உம் இதன் போதே உயிரிழந்தனர் என அவர் தெரிவிக்கிறார்.

நடேசன் புலித்தேவன் ரமேஷ் போன்றோர் சரணடைய முயன்றபோதே சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவர்கள் மோதலின் போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக 2009 மே 24ஆம் திகதிய அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவரை ஆதாரம்காட்டி அவர் குறிப்பிடுகிறார்.

பிரபாகரனும் அவருடைய மெய்ப்பாதுகாவலர்களும் பொதுமக்களுடன் இணைந்து நந்திக்கடலைக் கடப்பதற்காக வெள்ளி முள்ளிவாய்க்காலிலிருந்து கரய முள்ளிவாய்க்கால் வரை பொருத்தமான இடத்தைத் தேடியதாகவும், அதற்காக முழங்கால் வரை சேறு உடைய களப்புப் பகுதியில் காத்திருந்ததாகவும், எனினும் 19ஆம் திகதி காலை பத்து மணியளவில் விஜயபாகு ரெஜிமென்டினால் நெஞ்சில் கிரனைட் தாக்குதலுக்குள்ளாகியும், தலையில் துப்பாக்கிச்சூடு பட்ட நிலையிலும் சகதி தொய்ந்த நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் றொகான் குணரட்ண கூறியிருக்கிறார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com