புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஆயிரம் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் பெண் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மே மாதம் 18ம் திகதி விடுதலை அளிக்கப்படவுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த வெற்றியை கொண்டாடும் நோக்கில் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு விடுதலை அளிக்கப்படவுள்ளது. கைது செய்யப்பட்ட 11000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் இரண்டாயிரம் பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment