முல்லையில் தேசிய வீடமைப்பு அதிகார சபை; அடிக்கல் நாட்டும் நிகழ்வில் விமல்
முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ கலந்துகொண்டார். மாங்குளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காணியில் இன்று காலை அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
மேற்படி அலுவலகம் 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, துணுக்காய் பகுதியில் மீள்குடியேறிய மக்களை நேரில்ச் சென்று பார்வையிட்ட விமல் வீரவன்ஸ், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
0 comments :
Post a Comment