ஜெனரல் பொன்சேகா நீதிமன்றில் ஆஜர். விசாரணைகளை துரிதப்படுத்த நீதிபதி உத்தரவு.
புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த புலிகளியக்கத்தின் தலைவர்களை சுட்டுக்கொல்லமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என ஜெனரல் பொன்சேகா தெரிவித்ததாக சண்டே லீடர் பத்திரிகையின் வெளியான செய்தியினை அடிப்படையாக கொண்டு, அவசரகால சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனரல் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
ஜெனரல் இராணுவப் பொலிஸாரினால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். மேற்படி விடயம் தொடர்பாக ஜெனரல் பொன்சேகாவை விசாரிக்க அனுமதிக்குமாறு சீஐடி யினர் நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்தபோது, ஜெனரல் அவ்வாறு கூறினார் என்பதற்கு ஆதாரங்களை சமர்பிக்குமாறு கூறி நீதிமன்று அனுமதியை மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
யுத்த வெற்றிக்காக உழைத்த இராணுவ வீரர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவர் என்பதால் இவ்விசாரனணயை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன, உத்தரவிட்டுள்ளார்.
ஜெனரல் பொன்சேகா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதற்கு முன்னர் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அறைகள் அனைத்தும் இராணுவத்தினரால் சல்லடைபோட்டு தேடப்பட்டது. ஜெனரலுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தினைக் கருத்தில்கொண்டே மேற்படி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவருகின்றது
0 comments :
Post a Comment