நியூயார்க் டைம்ஸ் சதுக்க குண்டு வைப்பு: பாக்.இராணுவ அதிகாரி கைது
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைத்த குற்றவாளி ஃபைசல் ஷசாத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், காரில் குண்டு வைத்து விட்டு, துபாய் விமானத்தில் தப்ப முயன்ற அமெரிக்க பாகிஸ்தானியரான ஃபைசல் ஷசாத்(30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதையும், காரில் குண்டு வைத்து வெடிக்கச் செய்ய முயன்றதையும் ஷசாத் விசாரணையின்போது ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஃபைசலிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவருடன் தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபைசலை இவர் இஸ்லாமாபாத்தில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும், தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்து வந்ததாகவும் எப்பிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருந்ததாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment