Monday, May 24, 2010

நாடுகடந்த தமிழீழம் பிரபாகரனின் ஈழக்கனவிற்கு ஒப்பானது. கருணாவின் இரட்டைவேடம்.

நாடு கடந்த தமிழீழம் அரசு என்பது பிரபாகரனின் ஈழக் கனவுக்கு நிகரான அர்த்தமற்றதென கருணா தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு இவ்வாறு தெரிவித்துள்ள அவர் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான பாராளுமன்றம் என்ற புலிகளின் தேர்தலில் போட்டியிட்ட பலருடனும் நெருங்கிய உறவை பேணி வருகின்றார் என அறியமுடிகின்றது. நாடுகடந்த தமிழீழத்திற்காக சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் போட்டியிட்ட மட்டக்களப்பு ஓந்தாச்சி மடத்தினை சேர்ந்த தேவராசா என்பவருடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ள கருணா மறுபுறத்தில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்திருக்கும் கருத்தானது அவரது இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுகின்றது.

மேலும் அவர் அப்பத்திரிகைக்கு தெரிவிக்கையில் இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவின்றி எவ்வாறு தனிநாடு ஒன்றை புலம்பெயர் தமிழர்களினால் நிறுவ முடியுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் முரண்பாடு காணப்பட்டால், அவர்களினால் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழம் என்ற கோட்பாட்டினை முன்வைத்துள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவை மையாகக் கொண்டு இயங்கி வரும் ருத்ரகுமாரன் அணி மற்றும் நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நெடியவன் அணி மற்றும் பிரித்தானியாவை மையமாக கொண்ட அனி என மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் முரண்பாடான கருத்து நிலவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனி இராச்சிய உருவாக்கத்தை வலியுறுத்தும் எந்தவொரு புலி ஆதரவு அமைப்பிற்கும் இலங்கை வாழ் தமிழர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு மக்களை புறக்கணித்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பப் போவதில்லை எனவும், தங்களது இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் சுயலாப நோக்கில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் சிக்கித் தவிக்கவில்லை எனவும், அவர்கள் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் யுத்தத்தின் பெயரால் அவர்களுக்கு வெளிநாடுகளில் வாழ முடிந்ததாகவும் கூறியுள்ளார். எனினும், சில புலம்பெயர் தமிழர்கள் தற்போது உண்மையை நிலையை விளங்கிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 comments :

Anonymous ,  May 25, 2010 at 12:31 AM  

எதோ இன்று, நேற்று தொடங்கிய, பிரச்சனை என்று பித்தலாட்டம் போடும் எருமை மந்தை கூட்டங்களே!

தயவு செய்து சிந்தியுங்கள்!, முந்திய காலங்களை ஒருதடவை தன்னும் சிந்தித்து பாருங்கள்!,

அன்று ஒரு காலம், வடக்கு, கிழக்கு இணைந்த எல்லைகளை கொண்ட, மாநிலம், தனி தமிழ்நாட்டுக்கு நிகரான நாடு, தேர்தல் இன்றி அரசாங்கம் அமைக்கும் உரிமை, வரி அறவீடு, போலிஸ், நீதி, காணி, கல்வி, என்று சகல உரிமையும், சகல சந்தர்பங்களும் மட்டுமல்ல, இலங்கை இராணுவம் உள்ளே வரமுடியாது, ஆனால், புலிகள் இலங்கையில் எப் பகுதிக்கும் தடையின்றி செல்லலாம், குடும்பமாக உலகில் எங்கும் போகலாம், ஸ்ரீலங்கா வானுர்த்திகளிலும் செல்லலாம், கொழும்பில் தங்கலாம், சிகிட்சை பெறலாம், பிள்ளைகள் படிக்கலாம், பாதுகாப்புக்காக சிறிலங்கா விசேட இராணுவத்தினரை கேட்கலாம் என்று, ........ சொல்லி வேலையில்லை.

அப்படியெல்லாம் வந்த அறிய வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை எல்லாம், குறுக்கு புத்தி, குறுகிய சிந்தனை, குறுகிய மனப்பான்மையால் உதாசீனம் செய்து, நம்பியவர்களுக்கு இயன்றளவு நம்பிக்கை துரோகம் செய்து விட்டு, தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றி,

தலைக்கனம், ஆணவம், ஆசை பிடித்து குட்ட, குட்ட குனிபவனை மேலும், மேலும் குட்டி மடையனாக்கி, முழு இலங்கை மட்டுமல்ல, முழு உலகமே தங்கள் கைக்கு வரும் என்ற பகல் கனவில் கவுண்டு விழுந்து, முழுத் தமிழினத்தையும் வெட்கித் தலை குனியவைத்து, மானம் மரியாதை இழந்து உயிர் பிச்சை எடுக்கும் அளவுக்கு
கீழ்த்தரமாக போன சரித்திரம் கிட்லர் காலத்து சரித்திரத்தை விட கேவலமானது.

அன்று இவற்றை எல்லாம் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் பார்த்து, கேட்டு, ரசித்து விட்டு, இப்போ மட்டும் துள்ளி பாய்வது ஏன்?

உங்களுக்கு மட்டுமல்ல, இவ்வுலகில் எவருக்குமே புரிந்துகொள்ள முடியவில்லை..

Anonymous ,  May 25, 2010 at 11:54 AM  

உங்களின் வீர வசனங்களை சிறுவயது முதல் கேட்டுவந்தவர்களில் நானும் ஒருவன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com