'டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு வைத்தவன் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவன்'
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பைசல் ஷாகத் என்ற அந்த நபரிடம் அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வஜிஸ்தான் முகாம்களில் தங்கி நீண்ட நாட்கள் தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தனி நபராக இத்தகையை செயல்களை செய்திருக்க முடியாது என்பதால் பைசல் ஷாகத்துடன் தொடர்புடைய மற்றவர்களை கண்டுபிடிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டைம்ஸ் சதுக்கத்தில் வெடிகுண்டு வைக்க ஷாகத்துக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஷாகத்திடம் நடைபெற்று வரும் விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிடிபட்டுள்ள தீவிரவாதி மீது பயங்கரவாத தடுப்பு மற்றும் வெடிபொருட்களை வைத்து அமெரிக்கர்களை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment