Monday, May 3, 2010

அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு : தலிபான்கள் பொறுப்பேற்பு.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த கார்குண்டிற்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது. டைம்ஸ் சதுக்கம் அருகே நின்றிருந்த ஒருகாரில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து காரைப் பரிசோதித்தனர். அப்போது பின் சீட்டில் வெடிகுண்டு போன்ற மர்மமான பொருள் சிக்கியது.

இதையடுத்து உடனடியாக அந்தப் பகுதி சீல்வைக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், எப்பிஐ அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர். அத்துடன் ரோபோட் ஒன்றை வைத்து காரிலிருந்து மீட்கப்பட்ட பொருளை அதிகாரிகள் ஆராய்ந்தனர். இதில் அது வெடிகுண்டு என தெரிய வந்தது.

இந்த பதற்றம் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கார் குண்டு மூலம் அங்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுதுடுன் நியூயார்க்கில் பெரும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி வெடிகு‌ண்டை தாங்கள் தான் வைத்ததாக பா‌கி‌ஸ்தா‌னி‌ல் உ‌ள்ள தா‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் பொறு‌ப்பே‌ற்று‌ள்ளனர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌‌ன் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல் இ‌ல்லாத இணையதள‌ம் ஒ‌ன்று டைம்ஸ் சது‌க்க‌த்த‌p‌ல் வை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள கா‌ர்கு‌ண்டு‌க்கு பொறு‌ப்பே‌ற்று பா‌கி‌ஸ்தா‌ன் ‌தா‌லிபா‌ன்க‌ள் ‌வீடியோ வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

‌1 ந‌மிட‌த்‌தி‌ற்கு மே‌ல் ‌நீடி‌க்கு‌ம் காட்‌சி ம‌ர்ம நப‌ர் ஒருவ‌ர் தோ‌ன்‌றி பா‌கி‌ஸ்தா‌ன் போ‌ன்ற மு‌ஸ்‌‌லி‌ம் நாடுக‌ள் ‌மீது அமெ‌ரி‌க்கா நட‌த்‌‌தி வரு‌ம் தா‌க்குத‌ல்களை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌‌த்‌தினா‌ர். அமெ‌‌ரி‌க்கா இராணுவ‌த்‌தினரால் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் சடல‌ங்களு‌ம் ‌வீடியோ கா‌ட்‌சி‌யி‌ல் கா‌‌ண்‌பி‌க்க‌ப்ப‌‌ட்டன.

ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ‌தா‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் பொறு‌ப்பே‌ற்று‌ள்ளதை ஏ‌ற்க ‌நியூயா‌ர்‌க் காவ‌ல்துறை‌யின‌ர் மறு‌த்து‌ள்ளன‌ர். ‌தா‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் கு‌ண்டு வை‌த்தத‌ற்கான ஆதார‌ங்க‌ள் எதுவு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ காவ‌ல்துறை‌யின‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com