Tuesday, May 11, 2010

சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!!

(மீண்டும் திருத்தியமைக்கப் பட்ட விண்ணப்பப் படிவம்)
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2010)!! சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
போட்டிகளின் விபரங்கள்..

01.01.2005 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோருக்குமான பிரிவு..
பாலர் பாட்டு, சிறுகதை சொல்லுதல்

01.05.04 – 30.04.05 ஆண்டிற்கான பிரிவு

(அ) பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல்
(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்..

குறிப்பு:-
பாலர் பாட்டுப் பாடுதல், சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுபவர்கள் தகுதிநிலை பார்த்து (தரம்) பிரிக்கப்பட மாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கிவிக்கப்படுவர்.

கீழ்ப்பிரிவு (01.05.03- 30.04.2004)
(அ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(ஆ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 3 நிமிடங்கள் (அம்மா)

1ம் ஆண்டுப்பிரிவு (01.05.02 – 30.04.03)

(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 4 நிமிடங்கள் (ஒழுக்கம்)

2ம் ஆண்டுப்பிரிவு(01.05.01 –30.04.02)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 4 நிமிடங்கள் (கடமை)

3ம் ஆண்டுப்பிரிவு (01.05.00 –30.04.01)

(அ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 5 நிமிடங்கள் (நான் விரும்பும் பெரியார்)

4ம் ஆண்டுப்பிரிவு (01.05.99 –30.04.00)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 5 நிமிடங்கள் (கல்வி)

5ம் ஆண்டுப்பிரிவு (01.05.98 –30.04.99)

(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(அ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(இ) பேச்சு 5 நிமிடங்கள் (மனிதனை மாற்றும் தொழில் நுட்பம்)

6ம் ஆண்டுப்பிரிவு (01.05.97 –30.04.98)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) சமயஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
(இ) கணிதப் பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 7 நிமிடங்கள் (சூழல் மாசடைதல்)

7ம் ஆண்டுப்பிரிவு (30.04.97 ற்கு முன்பு)

(அ) பொது அறிவுப் போட்டி (வினாத்தாள்)
(ஆ) கட்டுரைப் போட்டி (வினாத்தாள்)

உங்கள் கவனத்திற்கு:-
(இவ்விண்ணப் படிவமே திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)
விண்ணப்பங்கள் எதிர்வரும் 10.06.2010க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தயவு செய்து விண்ணப்பப் படிவம் தொடர்பான விபரங்களை முழுமையாகவும், உண்மையாகவும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!!

விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

போட்டிகள் 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை Gemeinschaftszentrum Zürcher Buchegg, Bucheggstrasse 93, 8057 Zürich (BucheggPlatz) மண்டபத்தில் நடைபெறும், மேலதிக விபரங்கள் உங்கள் விண்ணப்பப்படிவம் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.

உங்கள் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி..
PEOT
Postfach 357,
3414 Oberburg.

பேச்சுப் போட்டிகள் உட்பட அனைத்து அறிவுப் போட்டிகளிலும் அரசியல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் விண்ணப்பப் படிவத்திற்குரிய கட்டணம் 25 (இருபத்தைந்து) சுவிஸ்பிராங்கினை Tamileelam Information Bereau, Postfach 2257, 8033 Zürich. முகவரியிட்டு 70-398436-9 என்ற தபால் வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அல்லது அதற்கு மேலாயின் ஒருவருக்கு 20 (இருபது) சுவிஸ் பிராங்கின்படி செலுத்தவும்.

2005 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோர் பிரிவுகளுக்கான கட்டணம் 15(பதினைந்து)) சுவிஸ் பிராங்குகள்.

விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சையின் போட்டியாளரின் வதிவிடவுரிமைப் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.

கணிதப் பரீட்சை சுவிஸ் பாடசாலை நடைமுறை (ஆண்டு) வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும்.

சமயப் பரீட்சையில் பங்குபற்றுவோர் தாம் சார்ந்த மதத்தினையும் குறிப்பிடவும்.

தொடர்புகட்கு:-
0763681546
0796249004
0762952043
0765289379

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com