பிரிட்டன்: டேவிட் கேமிரன் பிரதமராகும் வாய்ப்பு .
பிரிட்டனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சியினர் லிபரல் ஜனநாயகக் கட்சியினருடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமிரனும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் கிளக்கும் 24 மணி நேரத்தில் இரண்டு தடவை நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
ஆகவே கூட்டணி அரசை அமைக்க இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் விரைவில் உடன்பாடு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடன்பாடு காணப்பட்டதும் டேவிட் கேமிரான் பிரதமராக பொறுப்பேற்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய போதிலும் தனியாக ஆட்சி அமைப்பதற்கு போதுமான வாக்குகளைப் பெறவில்லை.
ஆகவே தேர்தலில் 3-வது இடத்தில் வந்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்கும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டுள்ளது. இத்தேர்தலில் 2-வது இடத்தில் வந்த தொழிற்கட்சியின் தலைவரும் பிரதமருமான கார்டன் பிரவுன் பதவி விலக வேண்டும் என்று நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில் அவர், நிக் கிளக்கை சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் கூறின.
0 comments :
Post a Comment