அவசரகாலச் சட்டத்தில் தளர்வு : பொலிஸ் அதிகாரங்கள் சில வாபஸ்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தினூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் சில வாபஸ் பெறப்பட்டுள்ளதாக நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போது அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு தனியார் உடைமைகளை சோதனை இடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தில் வரையறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருப்போரது விபரங்களை இனிவரும் காலங்களில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் தொடர்ந்தும் நீடிக்கும்.
0 comments :
Post a Comment