இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரௌன் ராஜினாமா - புதிய பிரதமராக டேவிட் கெமரூன்.
இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரௌன் நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் தோல்வியை அடுத்து தனது தொழிலாளர் கட்சி மற்றும் கூட்டணி கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரௌன் அறிவித்தார்.
முன்னதாக மே 6 இல் நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது. இதன் மூலம் அக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
கார்டன் பிரௌனின் ராஜினாமாவைத் தொடர்ந்து எலிசபத் மாஹாராணியால் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவரான டேவிட் கெமரூன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 200 வருடகாலத்தில் பிரிட்டனில் தெரிவான மிகவும் வயது குறைந்த பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment