ரஜ மாகா விகாரையின் பெட்டகத்தில் பொன்சேகாவின் மருமகனை தேடிய சிஐடி யினர்.
இலங்கை பாதுகாப்பு படையினருக்கான ஆயுதகொள்வனவின் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நிறுவனத்துடன் ஜெனரல் பொன்சேகாவின் மருமகனுக்கு தொடர்புள்ளதாகவும் அவர் தேடப்பட்டு வருவதுடன் அவருக்கு நிதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளதும் யாவரும் அறிந்தது.
இந்நிலையில் மிகிந்தல ராஜமகா விகாரையில் ஜெனரல் பொன்சேகாவின் மகன் மறைந்திருப்பதாக தேடிச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விகாரையின் மூலை முடுக்குகளெல்லாம் குடைந்துடன், விகாரையின் பெட்டகத்தினுள்ளும் தேடுதல் நடத்தியதாக விகாரையின் பிரதம பிக்கு வலவாகேன்குனுவேவே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விகாரையில் சிஐடி யினர் தனுனவை தேடுவதாயின் அவர்கள் அதை நாகரிகமான முறையில் செய்திருக்க முடியும் எனவும், தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜெனரல் பொன்சேவிற்கு ஆதரவாகவும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டவிரோதச் செயல்கள், கொலைகள் தொடர்பாக அச்சமின்றி பேசிய காரணத்திற்காகவும் என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கிலேயே இத் தேடுதல் இடம்பெற்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment