சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தின் வருடாந்த கலைநிகழ்வுகள்.
சுவிற்சர்லாந்து தமிழர் கலாச்சார மன்றத்தின் வருடாந்த கலைநிகழ்வுகள் நேற்று மாலை Unter Affoltern, Gemeindschaftzentrum இல் நடைபெற்றது. கலாச்சார மன்றத்தினரின் மேற்படி நிகழ்வுகள் 23 வருடங்களாக சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநகரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழ் மக்களின் கலைகலாச்சார விழுமியங்களை காப்பதனையும் இளம் சமுகத்தினருக்கு அவற்றை ஊக்குவிப்பதனையும் நோக்காக கொண்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் எம்நாட்டு கலைஞர்கள் பலரின் நெறியாள்கையில் சுமார் 20 சிறுவர் நிகழ்ச்சிகளும் பெரியவர்களின் நாடகங்கள் , சொற்பொழிவுகள், பட்டிமன்றம் என்பனவும் இடம்பெற்றன.
நேற்றைய நிகழ்வின் விசேட நிகழ்வாக கலாச்சார மன்றத்தினரின் தமிழ் தென்றல் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
0 comments :
Post a Comment