பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. 400 மைல் தொலைவில் சென்று தாக்கும் வல்லமை படைத்த ஷாகீன்-1 மற்றும் 180 மைல் தொலைவில் சென்று தாக்கும் வல்லமை படைத்த காஜ்னவி ஆகிய ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இந்த இரண்டு ஏவுகணைகளும் வெற்றிகரமாக சென்று தாக்கியதாகவும், இந்த ஏவுகணை சோதனையை பிரதமர் நேரில் பார்த்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment