Friday, May 7, 2010

இலங்கை - இந்தியப் படகுச்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கே.காந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகத்தின் வீசா அலுவலகத்தை திறந்து வைத்துப் உரையாற்றிய அவர், தலைமன்னாருக்கும் - இராமேஸ்வரத்திற்கும் இடையிலும், கொழும்பிற்கும் - திருச்சிக்கும் இடையிலும் இந்தப் படகுச் சேவைகள் இடம்பெற இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 25 ஆண்டுகளின் பின்னர் கொழும்பிற்கும் கேரளத்தின் கொச்சினுக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க 2009ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அரசுகள் இணக்கம் கண்டிருந்தமையும் நினைவுபடுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com