உலக நாடுகள் அணுஆயுதமற்ற உலகத்தை உருவாக்க முன்வரவேண்டும்: பான் கீ மூன்
அணுஆயுத பரவல் மாநாடு நியுயோர்க் நகரில் உள்ள ஐ.நா.தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இன்று தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதை தொடங்கி வைத்து பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன், பேசியதாவது அணுஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவது என்ற லட்சியத்தை நோக்கி நாம் முன்னேறவேண்டும். இது அடைய முடியாத லட்சியம் அல்ல. இதை அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்த லட்சியத்தை அடையவேண்டும் என்று நாம் உறுதி பூண்டு செயல்படவேண்டும். இதுதான் இப்போதைய தேவை. என்று கூறினார்.
1 comments :
இறைவன் அழகாகப் படைத்த இந்த உலகை மனிதன் அழிக்க எண்ணுவது சரியா?
வறுமையுண்டு அதை அழிக்கலாம்.
உண்ண உணவு கிடைக்காதவர்க்குக் கிடைக்கச் செய்து இல்லாமையை அழிக்கலாம்.
வாழுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இல்லம் அமைத்து அவர்கட்கு நிம்மதியை அளிக்கலாம்.
வசதியாக உலகைப் படைத்ததுடன் இறைவனின் வேலை முடிந்தது, ஜீவராசிகளைப் படைத்தது தோட்டக்காரர்களாக நின்று நமக்கும் அது வழியே நாம் போமளவும் எமக்கெனப் பயிர் வளர்த்துப் பயன் அடைவதற்கு மட்டுமே, ஆனால் நாம் ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் தெரியாமல் எம்மை அறிவாளி என்று கூறிக் கொள்வது சரியா? புத்திசாலி என்று நாம் அழைப்பவன்தான் அணுகுண்டுடை உண்டாக்குகிறாறான், புத்திசாலிக்கும்,அறிவு இலாதவனுக்கும் என்ன வித்தியாசம்? கிளையில் இருந்து அடிமரம் தறிப்பவன் யார்? எதிரிகளை அழிபது என்றால் அவர்களைக் கொல்லுவதல்ல நண்பராக்கிக் கொள்ளுதல், நன்னயம் செய்து விடல்.ஆப்பிகாம் லிங்கன்.
அணுகுண்டுவரை போட்டு இந்தியாவை வென்றிருப்பேன்,ஆனால் காந்தி பாவித்தது அகிம்சை என்னும் ஆயுதத்தை, அதனை என்னால் வெல்ல முடியவில்லையே,வின்ஸ்டன் சேச்சில்.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். நடப்பவை பான் கீ மூன் எண்ணப்படி நடந்தால்,இறப்பவர்
இறந்து கொண்டுதான் இருப்பர், ஆனால் வாழ்பவர் நிம்மதியாக இருப்பர்.
அல்லது ஐ.நா தலைமையும்
அத்துடன் எதிரியை தவிர மற்றைய எல்லா நாடுகளும் மனதாரச் சம்மதித்தால் எதிரியும் திருந்த மறுத்தால் பின் அணுகுண்டைப் பாவிக்கலாமா இல்லையா என்பதை யோசிக்கலாம்.
திரு.பான் கீ மூன் அவர்களே உமது முதலாவது சிறந்த முயற்சிக்கு உலகுடன் சேர்ந்து உம்மை வாழ்த்துகிறேன்.
கனகண்ணா.
Post a Comment