வவுனியாவில் பொது இடங்களில் இருந்த படையினர் வெளியேற்றம்.
வவுனியாவில் சுமர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து வெளியேறவுள்ளனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதியுடன் ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வெளியேறவுள்ளனர்.
இந்நிலையில், பூந்தோட்டம் சிறுவர் பூங்கா மைதானம், வவுனியா குளக்கட்டு மற்றும் பிரதான வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன், பாக் வீதியிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியசாலையில் தங்கியிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment