Saturday, May 1, 2010

நாடு கடந்த தமிழ் ஈழம் எங்கே? புலம் பெயர்ந்த எமது உறவுகளே ஏமாறதீர்கள்!- எழிலன்

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களே இந்த நாடு இல்லாத ஒரு அரசாங்கம் அமைப்பது என்பது எமது உறவுகளை ஏமாற்றும் வேலையாகும். இது வெறுமனே தமிழ்மக்களை ஏமாற்றும் புஸ்வாணமாகும்.எமது தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு இந்த அரசாங்கத்தால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது எம்மக்களே சிந்தியுங்கள். அண்மையில் நிகழ்ந்த யுத்தத்தினால் பல நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர் நோக்கியவர்கள் இலங்கையில் வாழும் எமது தமிழ் மக்களே.

நாட்டிற்கு வெளியே அரசாங்கம் அமைக்க முயற்சி செய்பவர்கள் அப்போது எங்கு போனார்கள், அப்போதும் இவர்கள் என்ன செய்தார்கள் புலிகளுக்கு பணம் சேத்தார்கள் பெருந்தோகையான பணத்தை இவர்களே ஏப்பம் விட்டு விட்டார்கள். இந்த சுத்துமாத்து குழுவினர் தான் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கிறோம் என்று மீண்டும் இவர்கள் புலம் பெயர் மக்களிடம் விரைவில் பணத்திற்கு வருவார்கள். ஆகவே மக்களே சிந்தியுங்கள் இனியும் நாம் ஏமாற என்ன முட்டள்களா? இவர்கள் தமது வருமானதிற்கே இந்த நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற மாயை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.

எமது மக்களே உங்களுக்கு தெரியும் இந்த தேர்தலில் பங்குபற்றுவோர் யார் என்று? சிலர் தமது சுகபோகங்களுக்காக 20- 25 வருடங்களுக்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்னும் சிலர் இலங்கையை பற்றி அறியாதவர்கள், இலங்கையை தெரியாதவர்கள் இவர்கள் எப்படி எம் மக்களுக்கு உதவுவார்கள்?

எமது அப்பாவி தமிழர்களை மீண்டும் குழியில் தள்ள முயலும் பயனில்லா நாட்டுக்கு உதவ இந்த அரசாங்கத்தை அமைக்க உதவுவதா? சிந்தியுங்கள். இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளை நம்புவோம் அவர்களை கேட்போம் எமது வாழ்க்கைக்கு உதவும் படி எனவே நாம் அவர்களை நம்புவோம்.

நாடு இல்லா அரசுகள் உலகில் எங்கே இருக்கிறது? இவை அனைத்தும் மீண்டும் எம்மை பாதாளத்தில் தள்ளும் முயற்சிகளே. எனவே இவற்றை நாம் நன்கு சிந்தித்து இந்த பயனற்ற தேர்தலில் பங்குபற்றுவதை தவிர்ப்பது தான் இலங்கையில் உள்ள எமது மக்களுக்கு நாம் செய்யும் நன்மையாகும். எனவே சிந்தித்து செயல் படுங்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com