இத்தாலியில் 9 தமிழ் இளைஞர்கள் கைது
இரகசிய நடவடிக்கையொன்றுக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதான அதிகாரியொருவரே தம்மை ஜரோப்பாவுக்கு அனுப்பியதாக, அகதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலிய காவற்துறையிரால் கைதுசெய்யப்பட்ட 9 தமிழர்கள் தெரிவித்துள்ளதாக இணையதளம் ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக இத்தாலிய காவற்துறையினர் இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் இந்த சம்பவமானது அரசாங்க அதிகாரத் தரப்பு போலிக் கடவுச்சீட்டு மூலம் கருணாவை இங்கிலாந்து அனுப்பிய சம்பவத்தை நினைவுட்டுவதாக இத்தாலியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த குழுவின் விபரம்.....
அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி
பாக்குலலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி
கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்
சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்
தர்மருகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பபாணம்
ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்
தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மாணிப்பாய்
எட்வட் யேசுஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை
நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த மக்கள் மத்தியில் இருந்த நிலையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கைதுசெய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் இருந்ததாகவும் இத்தாலியில் தம்மை சந்திக்கும் நபர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தமக்கு அறிவிக்கவிருந்ததாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிய காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் ஒருவரின் சகாவே தம்மை கட்டுநாயக்க விமான நிலையம் வரை அழைத்துச் சென்றதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் "பாலர்வோ" நகரில் உள்ள தொடரூந்து நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பின்னர், இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நமக்காக நாம் நிதி திரட்டல் நடவடிக்கையின் கீழ் இத்தாலியில் நிதித் திரட்டும் பொறுப்பு கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதானியொருவரின் அனுமதியுடன், கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிக்கு அனுப்பட்டதாக கூறப்படும் தகவல் கொழும்பில் ஊடக மட்டங்களில் பரவியுள்ள நிலையில் தாம் முற்றாக அதனை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment