Saturday, May 1, 2010

யுத்தத்தின் பெறுபேறு : கிழக்கில் மட்டும் 49000 விதவைகள்

யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதுடன் இவர்களில் 25 ஆயிரம் பேர் 25 வயதுக்கும் குறைவான பெண்கள் என தெரியவருகிறது. இந்த 25 ஆயிரம் பெண்களில் 12 ஆயிரம் பெண்களுக்கு குறைந்தது தலா மூன்று பிள்ளைகளோ அதற்கு மேலதிகமாகவே இருக்கலாம் என சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு சிறுவர்கள் மற்றும் பெண்களின் உளநல அபிவிருத்தியை ஏற்படுத்துவது குறித்து முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com