கேரளாவில் 38 இலங்கைத் தமிழர் கைது
இந்திய கேரள மாநிலத்தின் கொல்லம் நகருக்கு இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி நாளை திங்கட்கிழமை வருகை தரவுள்ள நிலையில் அங்கிருந்த 38 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளத்திற்கு இந்த இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு வந்தனர் என்பது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார். கடந்த புதன்கிழமையிலிருந்து விடுதியொன்றில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் வெள்ளிக்கிழமை மீன்பிடிப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில் அவர்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், கவலைப்படும் விதத்தில் அவர்கள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று கொல்லம் பொலிஸ் அத்தியட்சர் ஹர்சிதா அடனூரி தெரிவித்தார்.எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நாம் எடுத்துக் கொள்ளவிரும்பவில்லை. அவர்கள் எவ்வாறு இங்கு வந்தனர் என்பது குறித்து விசாரணை இடம்பெறுகிறது. இதுவரை சந்தேகத்திற்கிடமானதாக எதுவும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment