இங்கிலாந்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி
இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததையடுத்து புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிக இடங்களை பிடித்துள்ள கன்சர்வேடிவ் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இங்கிலாந்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 650 இடங்களில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சி 258 இடங்களை பெற்றுள்ளது.
அதிக இடங்களை பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. 57 இடங்களை கைப்பற்றியுள்ள சுதந்திர ஜனநாயக கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து கன்சர்வேடிவ் கட்சி ஆலோசித்து வருகிறது.
அக்கட்சியினருடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும் தயார் என்று பழைமைவாத கட்சியின் தலைவர் டேவிட் கேமரோன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து சட்டப்படி தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர் கார்டன் பிரெவ்ன் கட்சி முதலில் ஆட்சி அமைக்க முயற்சிக்க வேண்டும், இல்லையேல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ள கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கும்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவழியினர் 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் பழைமைவாத கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமைச்சராவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment