ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென 3 வது இராணுவ நீதிமன்று.
நாட்டில் இராணுவப் புரட்சி ஒன்றினை ஏற்படுத்தி ஜனாதிபதியின் குடும்பத்தினரையும் அவரது சகோதரர்களை கொலைசெய்துவிட்டு நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென மூன்றாவதாகவும் இராணுவ நீதிமன்றம்மொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவே இந்த மூன்றாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்படவுள்ளதாக பதுகாப்புத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதக்கொள்வனவு தொடர்பான 1800 ஆவனக்கோப்புக்கள் மீதான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 6 கேணல்கள் 1 பிரிகேடியர் ஆகியோர் மீதும் இக்குற்றச்சாட்டுக்கள் பதிவாகவுள்ளது.
0 comments :
Post a Comment