Thursday, May 20, 2010

சம்பூரில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் 2000 ஏக்கர் காணி இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கடற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிந்த நிலையில், அந்த மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்த சென்ற மூதூர் நீதவானுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதியமைச்சரின் தலையீட்டை அடுத்தே நீதவான் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் இந்திய தொழிலாளர்கள் மாத்திரமே மூதூர் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். சம்பூர் பகுதியில் உள்ள ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலம் மூதூரில் அமைக்கப்பட்டு வரும் அனல் நிலையத்தின் நிரமாணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அங்கு வாழ்ந்த மக்களுக்கு எவ்வித இழப்பீடுகளும் வழங்காது அந்த நிலங்கள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், நிலம் உரிமையாளர்களான மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com