Tuesday, May 11, 2010

முன்னாள் பிரதி அமைச்சரின் சாரதி எம்16 துப்பாக்கியுடன் கைது.

முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பைஸால் ன் சாரதி உட்பட இருவரை புத்தளம் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கொச்சி கட்டுவ சோதனைச் சாவடி நிலையத்தில் வைத்து இவர்கள் பயணம் செய்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் எம்16 ரக துப்பாக்கி ஒன்றினை அதற்கான தோட்டாக்களுடன் கண்டு பிடித்துள்ளதுடன் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாணைகள் தொடர்வதாக தெரியவருகின்றது.

ஆயுதக்குழுக்கள் , பதாளக்குழுக்களினால் மக்களுக்கு உள்ள அதே அச்சுறுத்தல் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவினராலும் உள்ளது என்பதை இவ்விடயம் உணர்த்துகின்றது. குறிப்பாக இலங்கையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் பாவிக்கும் இவ்வாயுதம் எவ்வாறு இவ்நபர்கள் கைக்குச் சென்றது என்பது கேள்வியாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com