மங்களூருவில் விமானம் வெடித்து சிதறியதில் 158 பேர் பலி
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது வெடித்து சிதறியதில் 158 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.துபாயில் இருந்து திரும்பியபோது விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் கர்நாடகா, கேரளாவை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் விமான பணியாளர்கள், பயணிகள் உள்பட 158 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் விமானம் தரையிறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
மங்களூருவில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மீட்பு பணியில் 10 தீயணைப்பு வண்டிகளும், 29 ஆம்புலன்சுகளும் ஈடுபட்டுள்ளன. இதுவரை 34 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மீட்பு பணியை துரிதப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிருடன் மீட்பு
விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் 160 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர் என்றும் காலை 6.03 மணிக்கு விமான விபத்து நடந்ததாகவும் ஏர் இந்தியா இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த 158 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணனூரை சேர்ந்த மொயின் குட்டி, காசர்கோடுடை சேர்ந்த கிருஷ்ணன், மங்களூரை சேர்ந்த உமர் பாரூக், டாக்டர் சபரீனா, அப்துல் சத்தார், பிரதீப் என்பது தெரியவந்துள்ளது. இரண்டு பேர் பெயர் விவரம் தெரியவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, அத்வானி இரங்கல்
விமான விமானத்தில் பலியான 169 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்துள்ளார்.
0 comments :
Post a Comment