படையினரின் நடமாட்டத்தால் வன்னியில் பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். UNHCR
வன்னியில் படையினரின் நடமாட்டத்தினால் தமிழ்ப்பெண்கள் அச்சத்துடன் வாழ்து வருகின்றார்கள் என்று ஐக்கிய நாடுகளுக்கான அகதிள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அரசின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளை வன்னியில் பார்வையிட சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு, அபிவிருத்தி மற்றும் ஒத்திசைவிற்குமான சுவிசின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
வன்னியில் தமிழ்ப்பெண்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்பு தமது நாளந்த வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக இருப்பிடங்களை அமைப்பதற்கும் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக்கொள்வதிலும் மற்றவர்களில் தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கை தொடர்பில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருசதாகவும் தெரிவிக்கப்டப்டுள்ளதுஇவ்வாறு பலதமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ள நிலையிலும், துணைவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்டப்டுள்ள நிலைகளில் இருப்பதால் படையினரின் அதிகளவான நடமாட்டத்தினால் இவ்வாறு ஆண்துணையின்றி வாழும் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னிப்போரின் போது இடம்பெயர்ந்த மக்கள பல இன்னல்களை சந்தித்து வதைமுகாம்களுக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையினால் ஒருதொகை உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்துள்ளது.
இது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் தற்போது பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment