TMVP யின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி சபைகளில் மோசடி : விசாரணைகள் ஆரம்பம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிதி முறைகேடு, அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, சட்டவிரோத நியமனங்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்தே, மேற்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கணக்காய்வு விசாரணை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணசபைக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து அரசாங்கமும் விசாரணை ஆரம்பித்திருக்கிறது.
0 comments :
Post a Comment